திருச்சியில்4 லட்சம் அதிமுக உறுப்பினர்களுக்கு கார்டுகள் வழங்கும் பணியை முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி துவக்கி வைத்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எட்டரை, போசம்பட்டி, புலியூர், கீரிக்கல்மேடு, ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு எட்டரை ஊராட்சியில் . உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக செயலாளர் கோப்ப நடராஜ் ஏற்பாட்டில், புதிய உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வழங்கினார்.
இதில் கழக அமைப்பு செயலாளர்கள் எஸ். வளர்மதி ஆர். மனோகரன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் முனைவர் பொன் செல்வராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். புல்லட் ஜான், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் எம். கண்ணதாசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் க. ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சமயபுரம் டி. ராமு, ஒன்றிய கழக செயலாளர்கள் எல். ஜெயக்குமார், எஸ்.பி. முத்துகருப்பன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர்கள் ஸ்ரீரங்கம் ரவிசங்கர், எட்டரை த. அன்பரசு, மற்றும் நிர்வாகிகள் சாத்தனூர் பி. வாசு, திருப்புகழ் செல்லதுரை, வழக்கறிஞர் ஆர். வெங்கடேசன், எல். ரங்கராஜ், முத்துவீரன், எல்.ஜெ. நவநீதகிருஷ்ணன், ஆமூர் எம். சுரேஷ்ராஜா, எஸ். பவர்சிங், சுபத்ரா மதிவாணன், மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.