திருச்சி மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி வெற்றிபெற்ற வீரர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம் மற்றும் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் சார்பாக திருச்சி மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டிகளை வயலூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது .
இதில் சப்ஜுனியர், ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கான வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது .
இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் வலுதூக்கும் பயிற்சி மையங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதில் 53, 59, 66, 74, 83, 93, 105,120 மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப்பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என நடைபெற்றது
இந்நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவில் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார்.