பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முதற்கட்டமாக தமிழகத்தில் தொடங்கியது,
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்யும் வசதிகளை ஏற்படுத்தி இன்று காலை முதல் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேட்பாளர்கள் உள்ளிட்டவர்கள் வாக்கு பதிவு செய்து வருகின்றனர்,
பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று திருச்சி காஜாமலை ஜம்லியாதஸ் சாதிக் மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வாக்குப்பதிவை பதிவு செய்தார் அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்கள் சென்று ஆய்வை மேற்கொண்டார்