டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, டிச.6: இந்தியாவின் அடையாளமாக திகழ்ந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் பள்ளிவாசல் 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டதை கண்டித்தும்,
ஆவணங்களின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புகள்வழங்கப்படாமல் ஒருதலை பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், இனி ஒரு பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மாவட்ம் சார்பாக வழிபாட்டு உரிமைக்கானபாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, மரக்கடை அருகில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார்.
மேற்கு மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான பைஸ் அகமது, ., வரவேற்புரை ஆற்றினார்.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், மமக பொதுச் செயலாளருமான அப்துல் சமது, ., பாலக்கரை வட்டார ஜமாத்துல் உலமா தலைவர் முகமது சிராஜ்தீன் மன்பஈ, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி,ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில்,தமுமுக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம்ஷா, இலியாஸ்,மமக இப்ராஹிம்.அஷ்ரப் அலி,ஹூமாயூன்.காஜா மொய்தீன், மாவட்ட துணை தலைவர் மணவை அக்பர், சையது முஸ்தபா,மாவட்ட துணை செயலாளர்கள்அப்துல் சமது, அப்துல் ரஹ்மான், ஹூமாயூன் கபீர், சம்சுதீன்,ரகமத்துல்லாஹ், ரம்ஜான் அலி, மமக மாவட்ட துணை செயலாளர்கள் அசாருதீன், முகமது காசிம், இம்ரான், அப்துல் மாலிக்,அப்துல்லாஹ், அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி, வார்டு, நிர்வாகிகள், பெண்கள்.குழந்தைகள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்தியான பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.