வாகன ஓட்டிகளுக்கு இடையில் ஏற்படும் கற்களை அப்புறப்படுத்த வேண்டும்
திருச்சி, டிச.7: திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியில் ஐந்தாவது மெயின் ரோட்டுக்கு அருகாமையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு அருகாமையில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது வருகிறது இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பாதி ரோட்டை அடைத்து வெளியிலே மண்ணைகொட்டியும் கற்களைக் கொட்டியும் போக்குவரத்துக்கு இடையூரு ஏற்படும் வகையில் கடந்த ஏழு நாட்களாக பணி நடந்து வருகிறது. எந்தவித அறிவிப்பு பலகையும் இல்லாமல் இரவு நேரத்தில் எந்த ஒரு லைட் வெளிச்சம் இல்லாமல் வாகண ஒட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது,
இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக அப்பகுதியில் உள்ள கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்,