இதயத் துடிப்பை எளிமையாக கண்டறிந்து கைபேசிக்கு அனுப்பும் கருவி அறிமுக விழா
திருச்சி, டிச,9: ஈ .சி.ஜி. இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய கையடக்க இயந்திரத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியானது திருச்சி கண்டோன்மெண் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் நிறுவனர் மணிகண்ட ராமன்,ஹர்ஷமித்ரா கேன்சர் இன் டியூட்டி மருத்துவர்.கோவிந்தராஜன், மருத்துவர் சிவம்,பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன்,மாருதி மருத்துவமனையின் மருத்துவர் சிலம்பரசன்,மருத்துவர் மோகன், மருத்துவர் சசி பிரியா,ஆகியோர் இந்நிகழ்ச்சியில்கலந்துகொண்டு உரையாற்றினர்.