திருச்சி, நவ,28: திருச்சி மாவட்ட திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி வார்டு எண் 12-ல் கீழ்கல்கண்டார் கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் மங்கம்மா மண்டபம் முட்புதரில் சிதலம் அடைந்து உள்ளது இந்த வரலாற்று சிறப்புமிக்க மண்டபத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து 14-11-2023 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்படும் வகையில் அந்த மண்டபத்தில் கால்நடை மருத்துவமனை கட்டி தர வேண்டி சாமானிய மக்கள் நல கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் புகார் கொடுத்தார்,
ஆனால் மங்கம்மா மண்டபத்தில் மரங்கள் வெட்டப்பட்டு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்கின்றதாக கூறி திருச்சி மாவட்ட சாமானிய மக்கள் நல கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் ,வரலாற்று சிறப்புமிக்க ராணி மங்கம்மா மண்டபம் ஆக்கிரமித்துள்ளதை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செயல்படுத்த வேண்டி திருச்சி மெயின்கார்டு கேட் அருகிலுள்ள மத்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் புகார் கொடுத்தார்,