அதிமுகவினர் கொண்டாட்டம்

 உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இணைப்புகள் வழங்கி கொண்டாடினர்


அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து தொடரப்பட்ட வழக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது அதன்படி கழகப் பொதுக்குழு படி தேர்ந்தடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி என்பது  செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒற்றை தலைமையாக எடப்பாடி கே.பழனிசாமி  தேர்ந்தெடுக்க பட்டதை கொண்டாடும் 


விதமாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி. தலைமையில் பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 


நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, பகுதி கழக செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், கழக பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, ஸ்ரீரங்கம் ரவிசங்கர், மற்றும் வட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், செயல் வீரர்கள், வீராங்கனைகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form