பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் போராட்ட கலந்தாய்வு கூட்டம்

 திருச்சியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் போராட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது


திருச்சி, மார்ச், 18:                             தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் போராட்ட கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் வாலண்டின் பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்களையும் கல்வித்துறையோடு இணைத்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்துவது என தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் லட்சுமணன், மாநில பொருளாளர் மகாலிங்கம், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பால்பாண்டி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form