அஸ்ஹாபே ரசூல் ஹஜ்ரத் ஹாஜ்ஜா மர்பஹா தாஹீராபீபி (ரலி) தர்காவின் 1,328வது சதக்கத்துல் ஜாரியா சந்தன கூடு விழா
திருச்சி பிப்21: திருச்சி கோட்டை ரெயில்வே ஸ்டேஷன் ரோடு ரெயில்வே காலனி எதிர்புறம் உள்ள மக்கா மஸ்ஜித் வளாகத்தில் அஸ்ஹாபே ரசூல் ஹஜ்ரத் ஹஜ்ஜா மர்ஹபா தாஹீராபீபி (ரலி) தர்கா உள்ளது இந்த தர்காவின் 1,328வது சந்தன கூடு உருஸ் விழா நடைபெற்றது.
விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு இறைவணக்கத்தை தொடர்ந்து இறைவழி தியானத்தில் ஈடுப்பட்டனர் பிறகு அதிகாலை தொழுகைக்கு பின்பு சிறப்பு துஆக்க்கள் ஓதுதல் மற்றும் தப்ரூக் (பிரசாதம்) வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்
