அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் ஆன்மீக குரு ஹழ்ரத் அ சாதிக் பாட்சா பாவா நேரில் சென்று வாழ்த்து கூறினார்,
திருச்சி, டிச,14: அரசியல் களத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆன்மீக குரு ஹழ்ரத் எம் ரபீக் அகமது பாவா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாட்டில் கட்சிக்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் கூட்டணி அமைத்து பயணித்தார்கள்.
அதுபோல் குருவருள் இன்றி திருவருள் இல்லை என்பதற்கு இலக்கணமாக குருவின் திசையில் பயணித்தவர்களாகவும் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
ஒரு மாநிலத்தின் முதல்வர் அந்த மாநில மக்களுடைய கஷ்ட நஷ்டம் வாழ்வாதார பிரச்சனைகள் மத அடிப்படையில் சிறைபிடிக்கப்படும் அப்பாவி இளைஞர்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளித்தல் மாநில அரசின் வேலை வாய்ப்புகளை அந்த மாநில மக்களை முன்னிறுத்த வேண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தை தவிர தமிழ் மக்களை தவிர ஒரு மாநிலம் அந்த மாநில முதல்வரின் ஆளுமையை கொண்டு நலன் பயக்க வேண்டும். அந்த தகுதி உடையவர் தான் அமமுக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டிடி தினகரன் எதிர்காலத்தின் தகுதி வாய்ந்த தலைவராக திகழ்கிறார் மிளிர்கிறார். அவருடைய பிறந்தநாளில் அவர் நீடூழி வாழ்க, வாழ்க என வாழ்த்தும் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் ஆன்மீக குரு ஹழ்ரத் அ சாதிக் பாட்சா பாவா வாழ்த்து தெரிவித்துள்ளார்