கல்வி உதவியை நிறுத்திய ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்.
திருச்சி, டிச,31: தமிழ்ப்புலிகள் கட்சி பொதுக்குழு கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பு ஏற்று அம்பேத்கர் நாளை சமத்துவ நாளாகவும், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமநீதி நாளாகவும் அறிவித்து மக்கள் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி திறம்பட ஆட்சி செய்து வரும் திமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,
ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறிக்கும் போக்கை கைவிட வேண்டும்,
பல்வேறு மசோதா நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்ரைஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்,
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கின்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்தியும்,பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை குறைத்தும் உள்ள ஒன்றிய அரசை கண்டித்து, உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
இதில் தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்