பெண்களின் பாதுகாப்பு. பற்றிய கவிதை
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு.
படித்தாலும் அடுப்படிதான் என்றும் உனக்கு.
என்றிருந்த விலங்கை உடைத்து நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் திமிர்ந்த ஞானச் செருக்கு என பாரதி கண்ட புதுமைப்பெண்களாய்.....
இன்று கிராம சபை நகர சபை மாநகர சபைகளென....அமெரிக்கத் துணை அதிபர் வரை....பட்டம் பதவிகளில் கிராம நிர்வாகம் முதல் இராணுவ அதிகாரம் வரையென....சென்றடைய வழிகளிருந்தும் பெண்களின் பாதுகாப்புக்கு தடைகள் இருக்கத்தான் செய்கிறது.
பெண்ணே மனோதிடமெனும் நம்பிக்கைக்கொள் நீ பாதுகாப்புத் தேடுவதை விடுத்து பிறருக்கு பாதுகாவலாய் மாறவிரும்பு.... வீடும் நாடும் தானாக மாறும்.
பெண்ணே உனது பாதுகாப்பை பிறரிடம் தேடாதே நீயே எல்லாமாய் இருக்கிறாய் என்பதையும் மறந்துவிடாதே.
நல்லாசிரியர். முனைவர். து. சுகந்தி டெய்சி ராணி, தலைமை ஆசிரியை, டி. இ. எல். சி. தொடக்கப் பள்ளி, பொன்மலை ப்பட்டி, திருச்சி.