ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய மின்வாரியம் திறப்பு விழா

 திருவெறும்பூர் மற்றும் காட்டூர் பகுதிக்கு ரூ 60 லட்சம் மதிப்பீட்டில்  புதிய மின் வாரிய கட்டடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்

 


திருவெறும்பூர் மற்றும் காட்டூர் பிரிவு மின்சார வாரியத்திற்கு ரூ 60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் திருச்சி பகிர்மான வட்டம்மற்றும் பெருநகர் கிழக்குக் கோட்டம் திருவெறும்பூர் வட்டத்தைச் சேர்ந்த திருவெறும்பூர்  மற்றும் காட்டூர் பிரிவு அலுவலகங்கள்   திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணா காலனியில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது


அதன் திறப்பு விழாநடைபெற்றதுவிழாவிற்கு  திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அருள்மொழி தலைமை வகித்தார் திருச்சி பெருநகர் வட்ட மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கலந்துகொண்டு மின்வாரிய அலுவலகங்களை ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார்.


விழாவில் முன்னாள் எம்எல்ஏ கே என் சேகரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கே எஸ் எம் கருணாநிதி,  மின்வாரிய செயற் பொறியாளர்கள்  திருச்சிக்கு கிழக்கு கோட்டம் சிவலிங்கம், நகரிய கோட்டம் பிரகாசம், ஸ்ரீரங்கம் கோட்டம் சிவகுமார், லால்குடி கோட்டம் அன்புச்செல்வன், துறையூர் கோட்டம் ஆனந்தகுமார், திருவெறும்பூர் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் நாராயணன், 


திருச்சி பெருநகர உதவி செயற்பொறியாளர் கட்டடவியல்,உதவி செயற்பொறியாளர்கள் விக்ரமன் சசிகுமார் உதவி பொறியாளர்கள் கமருதீன், ராஜேந்திரன்,கிருஷ்ணமூர்த்தி இளங்கோ ஈஸ்வரன் பெலிக்ஸ் சகாயராஜ்   மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form